அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய W D வீரசிங்க மற்றும் அவரின் பாரியார் நேற்று 17.07.2021 எங்களது திட்ட பயிற்சி நிலையத்திற்கும் கற்றாழை உற்பத்தி தொழிற்சாலை அமையப்பெறும் இடத்திற்கும் நேரில் வருகை தந்து திட்டம் சம்பந்தமான நகர்வுகள் குறித்து கலந்தாலோசித்து கொண்டார்.
இதன்போது இத்திட்டத்தின் மூலமாக எமது மாவட்டம் மற்றும் எமது நாட்டுக்கு ஏற்படப்போகும் சாதகமான பொருளாதார அடைவுகள் குறித்து மிகவும் பெருமிதம் அடைந்தார்.
மேலும் இத்திட்டம் அம்பாரை மாவட்டத்தில் அமையப் பெறுவதனால் நமது மாவட்டம் இலங்கையில் ஒரு முன்னணி மாவட்டமாக மாற்றம் அடையக் கூடிய சாத்தியங்கள் சம்பந்தமாகவும் இதன்போது அவரின் கருத்துக்களை முன்மொழிந்தார்.
மேலும் மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய இத்திட்டம் அமைய பெறுவதனால் ஜனாதிபதி இத்திட்டம் சம்பந்தமாக மிகவும் திருப்தி அடைந்துள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கை நாட்டின் ஏற்றுமதி அந்நியச் செலாவணியில் இத்திட்டம் ஒரு பெரும் பங்கினை வகிக்க உள்ளதாகவும் இதன்போது பேசிக் கொள்ளப்பட்டது.