“புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல்” எனும் நோக்கிற்கமைவாக “கற்றாழை உற்பத்தி ( Aloe Vera Production” சம்மந்தமான கலந்துரையாடல் பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம் அவர்களின் தலைமையில் இன்று (2021.09.26) இடம் பெற்றது.
மேலும், ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காக எமது பிரதேசத்திலும் கற்றாழை உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டியிருக்கின்றது. கௌரவ தவிசாளரின் முயற்சியின் பயனாக “கற்றாழை உற்பத்தி திட்டம்” (Aloe Vera Production) எமது பிரதேசத்தில் ஆராம்பிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் புதிய தொழில் முயற்சியாளர்கள் கற்றாழை உற்பத்தியூடாக தங்களது மாதாந்த வருமானத்தையும் மேம்படுத்த முடியும்.
இக் கலந்துரையாடலில் இதன் முகாமையாளர், எமது பிரதேசத்திலுள்ள கற்றாழை உற்பத்தி திட்டத்தின் புதிய தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எனவே, இவ் “கற்றாழை உற்பத்தி திட்டத்துடன் இணைந்து கொள்ள விருப்பமுள்ள புதிய தொழில் முயற்சியாளர்கள் இணைந்து கொள்ளுமாறு
கௌரவ தவிசார் எம்.எச்.அப்துல் றஹீம் அவர்கள் அழைப்பு விடுக்கின்றார்.
-பொத்துவில் தவிசாளர் ஊடகப் பிரிவு