Tamil
இத்திட்டம் சம்பந்தமாக மிக முக்கியமான விடயங்களை இங்கே குறிப்பிட வேண்டி உள்ளது. முதலாவதாக இத்திட்டம் எவ்வாறு உருவானது என்பது தொடர்பாக நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. நாங்கள் கடந்த 2019.12.12 ம் திகதி எங்களது கௌரவ ஆளுநர் பதவி ஏற்பு விழாவிற்கு நாங்கள் சென்றிருந்தோம். கௌரவ ஆளுநர் அவர்கள் முதலாவதான முக்கியமான கருப்பொருளாக அனைத்து மாகாணங்களையும் விட கிழக்குமாகாணம் வருமானம் குறைந்த மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ளதால் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு கிழக்கு மாகாண மக்களின் வருமானத்தை அதிகரிப்பது சம்பந்தமாக ஒரு உரையாடலை செய்து கொண்டிருந்தார். அதன் கருப்பொருளாக அவர் அடையாளம் கண்ட கிழக்கு மாகாணத்தில் மனித வளங்களும் நிலங்களும் மிக அதிகமாக காணப்படுகின்றது அதனை பயன்படுத்தி எவ்வாறு இதனை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடினார். அதிலும் குறிப்பாக பெண்கள் அதாவது கிழக்கு மாகாணத்தில் யுத்த காலத்தில் நிறைய ஆண்களின் படைகளில் ஈடுபட்டபோது அதிலும்கூட அதிகமானதாக பெண்கள் காணப்பட்டார்கள். அந்தப் பெண்கள் அவர்களுடைய குடும்ப வாழ்க்கையை கவனித்துக்கொண்டு அதே நேரத்தில் எவ்வாறு வருமானம் பெறக்கூடிய ஒரு வழி வகையை உருவாக்கலாம் என்பது சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அதன் மூலமாக உருவாக்கிய கருப்பொருள்தான் வீட்டுத் தோட்டத்தினை பயன்படுத்தி இவ்வாறு இந்த வருமானத்தை கூட்டிக் கொள்ளலாம் என்பது ஒரு தீர்க்கதரிசமாக முக்கியமான ஒரு கருப்பொருளை அவர்கள் வெளியிட்டார்கள். அந்த கருப்பொருளின் மூலமாக உருவான திட்டம் தான் இத்திட்டம் ஆகும். அதாவது கிழக்கு மாகாணத்தில் வறுமையை ஒழிப்பதற்காக வீட்டுத் தோட்டத்தை பயன்படுத்தி Greenery Evaluation அதாவது பச்சை நிறமான மதிப்பீடு என்ற திட்டத்தினை உருவாக்கி வீட்டுத்தோட்டத்தின் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ளல். ஆகவே அந்த திட்ட கருப்பொருளின் மூலமாக வீட்டுத்தோட்ட கருத்தின் காரணமாக ஆளுநர் அவர்களே நிறைய யோசனைகளை, திட்டங்களை வைத்துக் கொண்டிருந்தார்கள் அத்திட்டத்தில் உருவான ஒரு திட்டம் தான் இந்தக் கட்டளை பயிற்சியை அதிலும் முக்கியமாக அவர்களின் குறைந்த இடங்களை பயன்படுத்தி எவ்வாறு கூடுதலான வருமானங்களை பெற்றுக் கொள்வது என்பது சம்பந்தப்பட்ட ஒரு திட்டம் தான் இத்திட்டமாகும். ஒரு வீட்டில் உள்ள 5 பேஜஸ்ஸை பயன்படுத்தி வேறு வகையான பயிர்ச்செய்கையை செய்யும்போது அது ஒரு குறுகிய காலப்பகுதியில் குறுகிய வருமானத்தை தந்துவிட்டு மீண்டும் அதை நாங்கள் நிவர்த்தி செய்ய வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளது. இத்திட்டம் கட்டளை என்பது மூன்று வருடங்களுக்கு அதாவது நீங்கள் ஒரு தடவை பயிர் செய்தால் மூன்று வருடத்திற்கு அதனுடைய பிரயோசனத்தை தந்து கொண்டிருக்கின்ற போது அதனுடைய குட்டிகளை எடுத்து அதனை நீங்கள் 5 பேஜஸ் ஐ 10 பேஜஸ்களாக அதனை 15 பேஜஸ்களாக மாட்டிக் கொண்டு செல்கின்ற போது உங்களுடைய வருமானங்களும் அதிகரிக்கும். நாவல் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்னவென்றால் இந்தக் கட்டளை என்பது நான் அல்லது கௌரவ ஆளுநர் அவர்களே அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் அல்ல. இப்பயிர் ஆனது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்களுடைய மதகுருமார்கள் கற்றாளை பற்றி கூறியுள்ளார்கள். ஆகவே நாங்கள் ஏன் இந்த திட்டத்தினை கொண்டுவந்து இருக்கின்றோம் என்றால் இத்திட்டத்தில் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி இத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் கற்றாளை எவ்வாறு இந்த நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய வயிறாக மாற்றலாம் என்ற திட்டமே இந்த திட்டமாகும். இந்தக் கற்றாளையின் தேவைப்பாடு எங்களது நாட்டில் குறுகிய காலத்திற்குத்தான் பெறப்பட்டது. ஆனால் வெளி நாடுகளை எடுத்துக்கொண்டால் உதாரணமாக இந்தியா, அமெரிக்கா, சவுத் ஆபிரிக்கா, தாய்லாந்த் இப்படியான நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே இது அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தி அதனை அவர்கள் செய்து எங்களது நாட்டிலுள்ள இந்த கற்றாளையை பயன்படுத்தி மூலப் பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் கூட வெளிநாடுகளில் இருந்து கற்றாழையை இறக்குமதி செய்கின்ற நிலைமை இப்போது காணப்படுகின்றது. இந்த திட்டம் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி சொல்வதென்றால் முதலாவது Supply save management – Cultivation – Processing – Manufacturing – Export இவ்வாறான ஒரு வலைப்பின்னலை உருவாக்கி அந்த வலைப்பின்னலின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்கள் சரியான சந்தைக்கு சென்று அடையவேண்டும் என்ற ஏற்பாட்டையும் நாங்கள் செய்துள்ளோம். இத்திட்டமானது சரியான முறையில் Supply save management சரியாக பராமரிக்க முடியாத நிலையில் இத்திட்டம் வெற்றி அளிக்க முடியாது. ஆகவே நாங்கள் கிழக்கு மாகாணத்தில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ் சுயதொழில் வேலை திட்டத்தினை கொடுக்க வேண்டும் என்ற ஒரு நப்பாசையில் இத்திட்டத்தினை உருவாக்கி உள்ளோம். அதன் அறிமுகமாக 1000 குடும்பங்களுக்கு அம்பாரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு அத்திட்டத்தை நாங்கள் இன்று கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் இதனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் சந்தோசம் அடைகிறோம். இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு அம்பாரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்திய செய்து கொண்டு போகின்ற போது இரண்டு விதமான அனுகூலங்கள் எமது நாட்டிற்கு கிடைக்கப் பெறும் முதலாவது பயனாளிகளுக்கு உரிய இலாபம் அடுத்தது எங்கள் நாட்டிற்குரிய இலாபம் . எங்கள் நாட்டிற்குரிய லாபம் என்னவென்று சொன்னால் வெளிநாட்டிலிருந்து வரும் இது சம்பந்தப்பட்ட பொருட்களை நிறுத்திவிட்டு நாங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து உற்பத்தி மூலமாக வருகின்ற பொருட்களில் 20 சதவீதமான பொருட்களை எமது நாட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு 80 சதவீதமான பொருட்களை வெளிநாடுகளுக்கு சந்தைக்கு ஏற்றுமதி செய்கின்ற வேலையை செய்யும் போது எங்களது அன்னிய செலாவணி இரண்டு முறையில் எங்களுக்கு கூடுதலாகும். அதாவது இறக்குமதி செய்யப்படும் அந்நிய செலாவணி மீதப் படுத்தப்படும். அத்தோடு ஏற்றுமதி அந்நியச்செலாவணியும் சேர்ந்து எமது நாட்டினுடைய வருமானம் கூடும். ஆகவே இந்த கற்றாழை பயிர்ச் செய்கைக்கு வழி நடத்துவதற்காக எதிர்காலத்தில் ஒரு கற்றாழை அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்ற ஒரு முக்கியத்துவம் சம்பந்தமாக நாங்கள் எங்களது கௌரவ ஆளுநரிடம் பேச உள்ளோம். அதனைப் பேசி வந்த அதிகார சபையை உருவாக்குவோம் ஆனால் இந்த திட்டம் இன்னும் வெற்றி அழித்து இந்த நாடு பூராகவும் இத்திட்டம் செயல்படுத்துவதாக அமையும். அதாவது நாங்கள் மத்திய வெளிநாடுகளுக்கு போகின்ற போது தேயிலை எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றது அதேபோன்று கிழக்கு மாகாணத்திற்கு வருகின்றபோது கற்றாழை என்பது எமது உள்ளங்களுக்கு வரவேண்டும். எனவே அந்த வகையில் இந்த கற்றாழை பயிர் செய்கை இந்தத் திட்டத்துக்கு எங்களுடைய ஆளுநர் , அரசாங்க அதிபர், ஏனைய அதிகாரிகள் இணைந்து செயற்படுத்தி தரவேண்டும். இறுதியாக கௌரவ ஆளுநர் அவர்கள் கடந்த 2019.12.12 திகதி ஆளுநராகப் பதவியேற்ற போதும் என்னை அவரிடம் அறிமுகம் செய்து எமது ஊரைச் சேர்ந்த இர்சாத் அதாப் அவர்கள் என்னை அவர் அறிமுகப்படுத்தியதற்கு பிறகு இத்திட்டத்திற்கு அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை இது அரசியல் சார்ந்த எந்த கட்சிகள் சார்ந்து அமையப் பெறவில்லை இது கற்றாழை கட்சியாக மாத்திரம் காணப்படும்.
நன்றி.